தமிழ் தேசிய கூட்டமைப்பு எமக்கு சாபவிமோசனம் தந்துள்ளது! ஈ.பி.டி.பி

"தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எங்களை புனிதர்கள் ஆக்கிவிட்டது."
காலம் இன்று எம்மை விடுதலை செய்து விட்டது. ஒட்டுக் குழு என்றும் கொலைகாரர்கள் என்றும் எம்மைத் தூற்றிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எங்களிடம் ஆதரவு கோரி - ஆதரவு பெற்று எங்களை குற்றச்சாட்டுக்களில் இருந்து விடுதலை செய்து விட்டது. என்று யாழ் ஊடக அமையத்தில்  இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சி உறுப்பினர்களான   ஜெகன், மற்றும்  ஆகியோர் கருத்து தெரிவித்தனர் 

மேலும்  அங்கு   கருத்து தெரிவித்த ஈழ மக்கள்  ஜனநாயக கட்சியின் யாழ் மாநகரசபை உறுப்பினரான முடியப்பு றெமிடியஸ் “ பிள்ளைகள் , பேரப்பிள்ளைகளை சிங்கள பௌத்த கலாச்சாரத்திற்கு தாரைவார்த்துக் கொடுத்து விட்டு 70 வயதில் வந்து தமிழ் தேசியத்தை எங்களுக்கு கற்று கொடுக்க முனைகிறார்கள்.நாங்கள் 13 வயதில் இருந்தே தமிழ் தேசியத்திற்காக செயற்படுகின்றோம்.”  என்றும்  தெரிவித்தார் .
இதேவேளை   கூட்டமைப்பின் இணக்க அரசியல் முடிவுக்கு  தமிழர்  தரப்பில்   பலத்த எதிர்ப்பலை கிளம்பி உள்ளமை குறிப்பிடத்தக்கது 

No comments