காற்றாகி கனவாகி

காற்றாகி கனவாகி
கனவில் ஓர் ஒளியாகி
நேற்றுப் போல் எங்கே
நீ கரைந்தாய்
சேற்றில் ஒரு தாமரையோ
செவ்வான ஆதவனோ
காற்றுப் பெருவெளியில் கட்டறியா அற்புதமோ
பார்த்தறிய முடியாத பகலவனே
எம் இருளை
போக்கவென நீ போய் மறைந்தாய்
வியர்க்க விறுவிறுக்க
விண்ணை நாம் அண்ணாந்து நோக்குகிறோம்
சூரரே உம்மை நாம் தேடுகிறோம்.

வித்தகி (போராளி)


No comments