டக்ளஸ் முதல் றிசாத் வரை எல்லோரும் ஒன்றே!


உள்ளுராட்சி சபைகளை இடையூறி இன்றி நடாத்த ஒத்துழைப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தபோதும் சிலர் குழப்புவதாக அமைச்சர் றிசாட் பதியுதீன் தெரிவிப்பதில் உண்மை கிடையாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இ.சாள்ஸ் நிர்மலநாதன் என்பவர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக ஈபிடிபி ஆதரவுடன் சபைகளை கைபற்றிய பின்னர் இதே பாணியில் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தான் ஈபிடிபியுடன் பேசவேயில்லையென பல்டியத்திருந்தனர்.

ஆயினும் டக்ளஸின் தொலைபேசி சிட்டையை வெளியிட தயாராக இருப்பதாகவும் ரெமீடியஸ் வீட்டிற்கு தேடிவரவா என கேட்டதனை அம்பலப்படுத்தவா என ஈபிடிபி பதிலுக்கு எகிற கூட்டமைப்பினர் அடங்கிக்கொண்டனர்.

இந்நிலையில் வன்னியிலுள்ள சபைகளை கைப்பற்ற நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனுடன் நடத்தப்பட்ட பேச்சுக்கள் பற்றி றிசாத் பதியூதீன் அம்பலப்படுத்த அதற்கு தற்போது நாடாளுமன்ற உறுப்பினர் இ.சாள்ஸ் நிர்மலநாதன் என்பவர் சப்பைக்கட்டு கட்ட முன்வந்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் சபைகள் அமைப்பதற்கு முன்பு இதே அமைச்சருடனும் உரையாடியது உண்மையே . ஆனால் அதில் கூட்டுச் சேர்ந்து ஆட்சியமைக்கவோ அல்லது சபை விட்டுக்பொடுப்புத் தொடர்பிலோ உரையாடவில்லை. மாறாக மன்னார் வவுனியா , முல்லைத்தீவு மாவட்டங்களில் உள்ள சபைகளில் எந்தக் கட்சி அதிக ஆசனங்களை பெற்றதோ அந்தக் கட்சி ஆட்சியமைப்பது எனவும் ஏனைய கட்சிகள் எதிர்ப்பதில்லை என்றே கோரப்பட்டது. அதற்கு இணங்கியிருந்தனர்.
இருப்பினும் இதற்காக்கூட இந்த அமைச்சருடன் உரையாடுவதனை பலரும் விரும்பவில்லை.

ஏனெனில் இவர்கள் கொள்கையற்று காலத்திற்கு காலம் ஒவ்வொரு கட்சியுடன் கூட்டிணைந்து போட்டியிடுபவர்கள் என்பது எமது மக்களின் கருத்து. இந்த நிலையில் எமது நம்பிக்கையீனத்தை உறுதி செய்வதுபோல் மன்னாரில் முதலில் அமைத்த சபையான மன்னார் நகர சபையில் எமது கட்சிக்கு எதிராக இந்த அமைச்சரின் துணையோடு மகிந்த அணியினை சேர்ந்தவர் தவிசாளராக போட்டியில் இறக்கப்பட்ட நிலையிலேயே நாம் ஒரு வாக்கினால் வெற்றியீட்டினோமென அவர் தெரிவித்துள்ளார்.


No comments