மன்னாரிலிந்து கப்பல் சேவை?
காங்கேசன்துறை நாகப்பட்டினத்திற்கிடையிலான கப்பல் சேவையினை தொடர்ந்து தலைமன்னாருக்கும் இராமேஸ்வரத்திற்கும் இடையே கப்பல் சேவைக்கு தமிழக அரசு முற்பட்டுள்ளது.
முன்மொழியப்பட்ட சர்வதேச பயணிகள் படகு சேவை உட்பட, ஐந்து முக்கிய கடல்சார் உள்கட்டமைப்பு திட்டங்களை மேம்படுத்துவதற்காக, தமிழ்நாடு இந்திய மத்திய அரசிடம் நிதி உதவியைக் கோரியுள்ளது.
ராமேஸ்வரமும் தலைமன்னாரும் சுமார் 26 கடல் மைல் தொலைவில் அமைந்துள்ளன. இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே நாகப்பட்டினம்-காங்கேசன்துறை பயணிகள் படகு சேவை இயக்கப்பட்டதைத் தொடர்ந்து, ராமேஸ்வரம்-தலைமன்னார் படகு சேவைக்காக தமிழக அரசு முன்னதாக மத்திய அரசின் ஆதரவைக் கோரியிருந்தது.
முன்மொழியப்பட்ட ராமேஸ்வரம்-தலைமன்னார் இணைப்புக்கு இருதரப்பு ஒப்பந்தங்கள், குடிவரவு மற்றும் சுங்க வசதிகள், கடல்சார் பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் முனைய உள்கட்டமைப்பு ஆகியவை தேவைப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில், கூடுதல் படகு நிறுவனங்களை ஈர்ப்பதன் மூலம் தற்போதுள்ள நாகப்பட்டினம்-காங்கேசன்துறை சேவையை விரிவுபடுத்துவதற்கான வழிகளையும் தமிழகம் ஆராய்ந்து வருகிறது.
ஒகஸ்ட் 2024இல் தொடங்கப்பட்ட தனியார் படகுச் சேவை, பருவமழையின் போது தற்காலிகமாகத் தடைபட்டு, பெப்ரவரி 2025இல் மீண்டும் தொடங்கியது. மார்ச் முதல் நவம்பர் வரை வாரத்தில் ஆறு நாட்கள் இயக்கப்படும்150 இருக்கைகள் கொண்ட இந்தப் படகில், சராசரியாக சுமார் 60மூ பயணிகள் நிரம்பியுள்ளனர்.
செப்டம்பர் மாதம் வரை, இந்தச் சேவை நாகப்பட்டினத்திலிருந்து 21,812 பயணிகளையும், காங்கேசன்துறையிலிருந்து 26,242 பயணிகளையும் ஏற்றிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Post a Comment