பிள்ளையானிற்கு தொடர்ந்தும் சிறைச்சாப்பாடு!
மட்டக்களப்பில் கடந்த 2008ஆம் ஆண்டு துப்பாக்கியால் 5 பேரை சுட்டுக் கொலை செய்த சம்பவம் தொடர்பாகக் கைது செய்யப்பட்ட பிள்ளையான் மற்றும் இராணுவப் புலனாய்வுப் பிரிவின் தகவலாளிகள் இருவர் மீண்டும் சிறையிலடைக்கப்பட்டுள்ளனர்.
புpள்ளையானுடன் இணைந்து கொலைகளை அரங்கேற்றிய இராணுவப் புலனாய்வுப் பிரிவின் தகவலாளிகளான முகமட் சிபான், முகமட் சகீத் ஆகியோர் நீதிமன்றில் இன்று முன்னிலைப்படுத்தப்பட்டிருந்தனர்.அவர்கள் மூவரையும் எதிர்வரும் நவம்பர் 23ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
2008ஆம் ஆண்டு கல்லடியில் காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர் உட்பட இருவர் சுட்டுக் கொல்லப்பட்டமை, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி உறுப்பினர் உட்பட இருவர் காத்தான்குடியில் வைத்துச் சுட்டுக் கொல்லப்பட்டமை, வவுணதீவு கரையாக்கன்தீவுப் பகுதியைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவரைக் கடத்திக் கொலை செய்யதமை தொடர்பிலேயே கைதுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கொலைகள் தொடர்பாக தகவலாளிகளான லண்டனில் உள்ள, காத்தான்குடியைச் சேர்ந்த முகமட் பாய்ஸ் இதுவரை கைது செய்யப்படாதுள்ளார்.
இந்நிலையில் பிள்ளையான் உட்பட 3 பேரையும் எதிர்வரும் நவம்பர் 23ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்ட நீதவான், லண்டனில் உள்ள சந்தேக நபரான ‘பொலிஸ் பாய்ஸ்’ என்றழைக்கப்படும் முகமட் பாய்ஸ{க்குத் தொடர்ந்து திறந்த பிடிவிறாந்து பிறப்பித்துள்ளார்.

Post a Comment