ஞானசாரரிற்கு மீண்டும் காவி உடையாம்!



சிறையிலடைக்கப்பட்டுள்ள ஞானசார தேரர் மீண்டும் துறவு பூணுவதற்கான  திகதியையும் நேரத்தையும் ஒழுங்குபடுத்துமாறு சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்துக்கு ஒக்டோபர் 30 அன்று அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில், பௌத்த போதனைகள் மற்றும் ஒழுக்காற்று விதிகளுக்கு இணங்க துறவு பூணும் சடங்கு நடத்தப்பட வேண்டும் என்று மகாநாயக்க தேரர் குறிப்பிட்டுள்ளார்.

சடங்கை எளிதாக்குவதற்கு ஏற்ற பொருத்தமான திகதியையும் நேரத்தையும் விரைவில் வழங்குமாறு மகாநாயக்க தேரர் சிறைச்சாலை திணைக்களத்தைக் கேட்டுக்கொண்டுள்ளார்.

தானும் உட்பட கோட்டைப் பீடத்தின் சங்க சபையின் 10 உறுப்பினர்களைக் கொண்ட குழுவினர் நிகழ்வுக்காக சிறைச்சாலைக்கு வருகை தருவார்கள் என்றும் அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வருகைக்கான அவசியமான ஏற்பாடுகளைச் செய்து, திட்டமிடப்பட்ட திகதியையும் நேரத்தையும் தனக்கு அறிவிக்குமாறு அவர் அதிகாரிகளைக் கேட்டுக்கொண்டுள்ளார்.

மத நிந்தனைகளையடுத்து தண்டிக்கப்பட்டு சிறையிலடைக்கப்பட்ட ஞானசார தேரரின் காவி அங்கி களையப்பட்டு சிறை உடை வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


No comments