கஸ்ஸப சகபாடிகளுடன் உள்ளே!
அநுராதபுரம் ருவன்வெலிசாய வளாகத்தில் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பலாங்கொட கஸ்ஸப தேரர் உள்ளிட்ட மூன்று பௌத்த பிக்குகள், ராஜாங்கனை சத்தரதன தேரர் தலைமையிலான குழுவினருடன் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதேவேளை உண்ணாவிரத போராட்ட கூடாரமும் அங்கு கூடிய மக்களால் அடித்து நொருக்கப்பட்டுள்ளது.
அனுராதபுரத்தில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க ருவன்வெலி மகா சேயவிற்கு அருகில் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த வணக்கத்திற்குரிய பாலங்கொட கஸ்ஸப தேரர் மற்றும் மேலும் இரு பௌத்த பிக்குகள், அங்கு ஏற்பட்ட பதற்றமான சூழலைத் தொடர்ந்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
அண்மையில் துறவறத்திலிருந்து நீக்கப்பட்ட ராஜங்கனயே சத்தாரத்தன என்பவர் தலைமையிலான குழுவினருக்கும், போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பிக்குகளுக்கும் இடையே ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்தே கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.
மோதலின் போது, ராஜங்கனயே சத்தாரத்தன தடியால் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், அவரது தலையில் காயங்கள் ஏற்பட்டுள்ளன.
அனுராதபுர புனித நகர அபிவிருத்தித் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தும், மேலும் சில கோரிக்கைகளை முன்வைத்தும் உண்ணாவிரதப் போராட்டத்தை பிக்குகள் ஆரம்பித்திருந்தனர்.
ராஜபக்ச குடும்பத்தை மீண்டும் ஆட்சி பீடமேற்ற முற்பட்டுள்ளதான குற்றச்சாட்டுக்களின் மத்தியில் இலங்கை அரசின் வரவு செலவுத்திட்டத்தின் போது குழப்பங்களை ஏற்படுத்த முற்பட்டதாக பலாங்கொட கஸ்ஸப தேரர் மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளது.

Post a Comment