தாயகத்தில் வாழ்வியலிற்கான போராட்டமே!

 


அனுராதபுரத்தில் பிக்குகளிடையே மோதல் மற்றும் அனுர அரசின் வரவு செலவுத்திட்டமென தென்னிலங்கை பரபரப்படைந்துள்ள நிலையில் வடகிழக்கு தமிழர் தாயகத்தில் அடிப்படை உரிமைகளிற்கான போராட்டங்கள் தொடர்கின்றன.

அனுர அரசு தனது 2027ம் ஆண்டிற்கான வரவு செலவுத்திட்டத்தில் முப்படைகளிற்கான நிதி ஒதுக்கீட்டை 69ஆயிரம் கோடியாக மேலும் அதிகரித்துள்து.

இந்நிலையில் யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை (13)படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள உயர்பாதுகாப்பு வலய  காணி உரிமையாளர்களின் தொடர் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

வலிகாமம் வடக்குப் பகுதிகளில் உயர் பாதுகாப்பு வலயமாக உள்ள தமது சொந்தக் காணிகளை விடுவிக்குமாறு கோரி, காணி உரிமையாளர்கள் இராணுவத்தினரின் "கொமாண்டோ" பங்களா முன்பாக இன்றைய தினம் வெள்ளிக்கிழமையும் 30 ஆவது வாரமாகத் தமது கவனயீர்ப்புப் போராட்டத்தினை முன்னெடுத்திருந்தனர்.

வலிகாமம்  வடக்கில் பூர்வீக தமிழ் குடிமக்கள் கடந்த 1990 ஆம் ஆண்டு ஜூன் மாதக் காலப்பகுதியில் அவர்களது சொந்த இடங்களிலிருந்து வெளியேற்றப்பட்ட பின்னர், அப்பகுதி உயர் பாதுகாப்பு வலயமாக பேணப்படுகிறது.

யுத்தம் முடிவடைந்து 17 வருடங்கள் கடந்த நிலையிலும் அப்பகுதிகளிலிருந்து பாதுகாப்புத் தரப்பினர் வெளியேறாத நிலையில், பிரதி வெள்ளிக்கிழமைகளிலும் போராட்டங்களை முன்னெடுப்பதாகக் காணி உரிமையாளர்கள் எடுத்த தீர்மானத்திற்கு அமைய இன்றைய தினம் 30 ஆவது வெள்ளிக்கிழமைப் போராட்டம் இடம்பெற்றுள்ளது.


No comments