வடக்கு, கிழக்கு அரசியல் நிலைமைகள் குறித்து சிறீதரன் எம்.பி.யிடம் கேட்டறிந்த திருமா
யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்துள்ள இந்திய மக்களவை உறுப்பினரும், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.
சிரேஷ்ட அரசியல்வாதி எம்.கே.சிவாஜிலிங்கத்தின் இறுதி நிகழ்வில் கலந்துகொள்வதற்காக யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்திருந்த தொல்.திருமாவளவன், நேற்றைய தினம் திங்கட்கிழமை நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனை யாழ்ப்பாணத்தில் நேரில் சந்தித்துக் கலந்துரையாடினார்.
இதன்போது, வடக்கு, கிழக்கு மாகாணங்களின் தற்போதைய அரசியல் நிலைமைகள் மற்றும் தமிழ் மக்களின் தற்கால வாழ்க்கை நிலை தொடர்பில் தொல்.திருமாவளவன் விரிவாகக் கேட்டறிந்துகொண்டார்.

Post a Comment