நாடளாவிய கல்விசாரா ஊழியர்களின் வேலைநிறுத்தத்திற்கு ஆதரவாக யாழ். பல்கலைக்கழக முன்றலில் போராட்டம்!


பல்கலைக்கழகங்களில் நீண்டகாலமாகத் தீர்க்கப்படாத பிரச்சினைகளுக்குத் தீர்வு கோரி இலங்கையிலுள்ள பல்கலைக்கழகங்களில் முன்னெடுக்கப்படும் தொழிற்சங்க நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவித்து, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திலும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. 

இலங்கையிலுள்ள பல்கலைக்கழகங்களில் கல்விசாரா ஊழியர்கள் சம்மேளனம் முன்வைத்துள்ள கொடுப்பனவு தொடர்பான பிரச்சினைக்கு தீர்வு கோரி, இன்றைய தினம் புதன்கிழமை நாடு முழுவதும் உள்ள அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் கல்விசாரா ஊழியர்கள் ஒருநாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அதற்கு ஆதரவு தெரிவிக்கும் முகமாக யாழ்ப்பாண பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் பல்கலை முன்றலில் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

No comments