மண்டைதீவு சுற்றுலா தளத்தில் இரவு நேர களியாட்ட நிகழ்வுகளுக்கு தடை
யாழ்ப்பாணம் , மண்டைதீவு பகுதியில் உள்ள சுற்றுலா தளத்தில் இரவு நேர களியாட்ட நிகழ்வுகளை நடாத்துவதற்கு அனுமதி வழங்குவதில்லை என வேலணை பிரதேச சபையில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது
பிரதேச சபை அமர்வு நேற்றைய தினம் வியாழக்கிழமை சபை மண்டபத்தில் தவிசாளர் சிவலிங்கம் அசோக்குமார் தலைமையில் நடைபெற்றது.
அதன் போது, மண்டைதீவு சுற்றுலா தளத்தில் தீபாவளி தினைத்தினை முன்னிட்டு , இரவு நேர களியாட்ட நிகழ்வுகளுக்கு ஏற்பாடு நடைபெற்று வருவதாக சமூக ஊடகங்களில் பகிரப்படும் காணொளி தொடர்பில் பிரஸ்தாபிக்கப்பட்டது.
அதன் போது, தவிசாளர் , குறித்த நிகழ்வுக்கான அனுமதிக்காக இதுவரையில் சபையில் எவரும் விண்ணப்பிக்கவில்லை என தெரிவித்தார்
அதனை தொடர்ந்து இரவு நேர களியாட்ட நிகழ்வுக்கு அனுமதி வழங்கக்கூடாது என உறுப்பினர்கள் சபையில் கோரியதை அடுத்து, நிகழ்வுக்கு அனுமதி வழங்குவதில்லை என சபையில் தீர்மானிக்கப்பட்டுள்ளது

Post a Comment