போலி கடவுசீட்டு மூலம் லண்டன் செல்லத் திட்டம்: ராமேஸ்வரத்தில் 3 இலங்கையர்கள் கைது!
டெல்லியில் போலி கடவுசீட்டு பெற்று , லண்டன் செல்வதற்காக சட்டவிரோதமான முறையில் தமிழகத்திற்குள் நுழைந்த மூன்று இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்
ராமேஸ்வரம் கடற்பகுதியில் படகொன்றில் நுழைந்த மூவரை கியூ பிரிவு பொலிஸார் கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்தனர்
அதன் போது குறித்த மூவர் படகில் தமிழகம் வருவதற்கு ஒரு இலட்சத்து 10 ஆயிரம் ரூபாய் பணம் வழங்கியதாகவும் , இராமேஸ்வரத்தில் இருந்து , டெல்லிக்கு சென்று , அங்கே போலி கடவுசீட்டினை பெற்று லண்டன் செல்ல திட்டமிட்டு இருந்ததாகவும் , விசாரணைகளில் தெரிவித்துள்ளனர்
கைது செய்யப்பட்ட மூவரிடமும் கியூ பிரிவு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்

Post a Comment