ஞானசாரரை விடுவிக்குமாறு மகாநாயக்க தேரர்கள் கோரிக்கை விடுக்கவில்லை!



ஞானசார தேரரை விடுவிக்குமாறு மகாநாயக்க தேரர்கள் இதுவரை அரசிடம் கோரிக்கை விடுக்கவில்லை என அனுர அரசின் அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜெயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். 

அமைச்சரவை முடிவுகளை அறிவிப்பதற்காக நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்டுள்ள அமைச்சர் மகாநாயக்க தேரர்கள் கோரிக்கை விடுத்தாலும், அரசு எப்போதும் நாட்டில் நடைமுறையில் உள்ள சட்டத்தின்படியே செயல்படுவதாக தெரிவித்தார்.

சட்டத்திற்கு அப்பாற்பட்டு எந்த மாற்றங்களையும் செய்ய அரசு விரும்பவில்லை.

ஞானசார தேரர் தொடர்பாக மகாநாயக்க தேரர்கள் சிறைச்சாலை ஆணையருக்கு முன்னதாக அனுப்பிய கடிதத்தின் அடிப்படையிலேயே சிறைச்சாலை விதிமுறைகள் மாற்றப்பட்டதாகவும் அனுர அமைச்சரவையின் ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.  

No comments