முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர் கைது!
இந்தியாவிலிருந்து நாடு கடத்தப்பட்ட முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர் ஒருவர், கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
பயங்கரவாத விசாரணைப் பிரிவினரின் தகவலின்படி, 50 வயதான இந்த சந்தேகநபர் நேற்று (அக்டோபர் 26) இரவு இலங்கையை வந்தடைந்த சில நிமிடங்களிலேயே கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர், கடந்த 2015ஆம் ஆண்டு விடுதலைப் புலிகள் அமைப்பை மீண்டும் கட்டியெழுப்ப முயன்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில் இந்திய பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டிருந்தார்.
இந்திய நீதிமன்றத்தில் அவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், அண்மையில் தண்டனைக் காலம் நிறைவடைந்தது. இதனைத் தொடர்ந்து, இந்திய அதிகாரிகளால் அவர் இலங்கைக்கும் நாடு கடத்தப்பட்டார்.

Post a Comment