கண் பார்வை போய்விடுமாம்:சிராந்தி கவலை!
கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி மகிந்தவின் மனைவியை சிறையிலடைத்தால் அவரிற்கு கண்பார்வை இழப்பு ஏற்படலாமென அவரது சட்டத்தரணி நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.
கொழும்பு சிறுவர் மருத்துவமனைக்கு வழங்கப்பட வேண்டியஸ்கேன் கருவியை வழங்கத் தவறியது மற்றும் அதற்கான நிதியை கையாடல் செய்ததென ஊழல் குற்றச்சாட்டுகள் சிராந்தி கைதாகியுள்ளார்.
இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துரைகளைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் அதிகாரிகளால் முன்னாள் முதல் பெண்மணி சிராந்தி ராஜபக்ச, இன்று புதன்கிழமை (07) கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போது எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (13) வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டிருந்தார்.
இன்று காலை கொழும்பு கிருலப்பனையில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து, இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் அதிகாரிகளால் சிராந்தி ராஜபக்சவிடம் விசாரணை நடத்தப்படடிருந்தது.
திங்கள்கிழமை இரவு (05) இலங்கை திரும்பிய சிராந்தி ராஜபக்சவை, ஓக்டோபர் 13 ஆம் திகதி நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாகுமாறு அறிவித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Post a Comment