அனோஜன் விடுதலை:உரிமை கோரும் அரசு!
இலங்கை பிரஜையான அனோஜன் சிவராசாவுக்கு சவூதி அரேபியாவில் விதிக்கப்பட்டிருந்த மரண தண்டனையை ரத்து செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சவூதி அரேபிய உயர் நீதிமன்றம் 2026 அக்டோபர் 13 அன்று மரண தண்டனை விதித்து பிறப்பித்த தீர்ப்பை ரத்து செய்துள்ளதாக அறிவித்துள்ளது.
இதனிடையே இலங்கை அரசாங்கத்தின் தொடர்ச்சியான இராஜதந்திர மற்றும் சட்ட ரீதியான முயற்சிகளின் பலனாக விடுதலை கிடைத்துள்ளதாக அரசு உரிமை கோரியுள்ளது.
இலங்கையரான அனோஜன் சிவராசாவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை இரத்து செய்யத் தீர்மானித்த சவூதி அரேபிய அரசுக்கு இலங்கை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தனது நன்றியைத் தெரிவித்துள்ளார்.
அனோஜன், அவரது குடும்பத்தினர் மற்றும் இந்த வழக்கு தொடர்பில் அக்கறை கொண்டிருந்த இலங்கையர்கள் அனைவருக்கும் பெரும் நிம்மதியை அளித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
பொறுமையான இராஜதந்திர நடவடிக்கைகள், நட்பு நாடொன்றின் சட்ட நடைமுறைகளுக்கு மதிப்பளித்தல் மற்றும் வெளிநாட்டில் உள்ள இலங்கைப் பிரஜைக்காகப் பல்வேறு தரப்பினர் மேற்கொண்ட அயராத முயற்சிகள் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை தீர்மானம் எடுத்துக்காட்டுவதாகவும் இலங்கை ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

Post a Comment