குடும்பமாக வைத்தியசாலையில்!
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, திடீர் மாரடைப்பு காரணமாக இன்றைய தினம் திங்கட்கிழமை (12) காலை கொழும்பிலுள்ள தனியார் மருத்துவமனையில் அவசர சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை காரணமாக அவர் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, விசேட மருத்துவக் கண்காணிப்பின் கீழ் சிகிச்சை பெற்று வருகின்றார்.
மஹிந்த தனது உத்தியோகபூர்வ இல்லத்தில் இருந்த வேளையிலேயே நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது.
இதனிடையே வெலிக்கடை சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த மகிந்தவின் பாரியார் சிராந்தி ராஜபக்ச கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவர் வைத்தியசாலையின் இருதய நோய் சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கடந்த சில நாட்களாகவே தொடர்ச்சியாகப் பல்வேறு வழக்கமான மருத்துவப் பரிசோதனைகளுக்கு மகிந்த மற்றும் அவரின் மனைவி சிராந்தி உட்படுத்தப்பட்டு வந்த நிலையிலேயே தற்போது இருவரும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஏற்கனவே மகன் நாமல்ராஜபக்ச மனைவி சிராந்தி இருவரும் சிறையிலடைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment