சுரேஷ் சாலே:பிரகீத் எக்னலிகொட கடத்தலிலும் ஆப்பு!



பிரகீத் எக்னலிகொட சம்பந்தப்பட்ட வழக்கு அடுத்த விசாரணைத் திகதியில், முன்னாள் புலனாய்வுப்பிரிவு பணிப்பாளர்  சுரேஷ் சாலேயை வழக்கில் சாட்சியாக அழைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அரசுத் தரப்பு, மூன்று நீதிபதிகள் கொண்ட உயர் நீதிமன்ற அமர்விற்குத் தெரிவித்துள்ளது.

பிரகீத் எக்னலிகொடவின் கடத்தல் மற்றும் காணாமல் போதல் தொடர்பான வழக்கில் நான்காவது சாட்சியான சுமதிபால சுரேஷ் குமார என்ற முரளியின் சாட்சியம் நேற்று (09) கொழும்பு மூன்று நீதிபதிகள் கொண்ட உயர் நீதிமன்றத்தில் மீண்டும் அழைக்கப்பட்டது.

  தலைமை நீதிபதிகள் நயன செனவிரத்ன, நலின் ஹேவவாசம் மற்றும் லக்மாலி ஹேவவாசம் ஆகியோரைக் கொண்ட மூன்று நீதிபதிகள் கொண்ட உயர் நீதிமன்ற அமர்வின் முன் இவ்வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

அடுத்த (16) ஆம் திகதி மேலும் விசாரணை நடைபெற உள்ளது. அன்று சாட்சிகள் 53 மற்றும் 98 ஆகியோரை வரவழைப்பதற்கான அறிவிப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

பிரகீத் எத்னலிகொடவின் கொலை தொடர்பாக மூன்று நீதிபதிகள் கொண்ட உயர் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்ட சந்தேக நபர்கள் பின்வருமாறு. 

பிரதான குற்றவாளி பிரிகேடியர் ஷம்மி அர்ஜுன குமாரரத்ன,

முன்னாள் கிரித்தலே இராணுவ முகாமின் கட்டளை அதிகாரி லெப்டினன்ட் கேணல் மற்றும்  கடத்தலுக்காக குற்றம் சாட்டப்பட்ட லெப்டினன்ட் கேணல் பிரபோத சிறிவர்தன

சம்பவத்தின் போது (முன்னாள் மேஜர்), லெப்டினன்ட் கேணல்டி.இ.ஆர். பீரிஸ்(எரந்தா) 

இராணுவப் புலனாய்வு உறுப்பினர் டபிள்யூ.டி. உபசேன (என்கிற சுரேஷ்)

இராணுவப் புலனாய்வு உறுப்பினர் ஆர்.எம்.பி.கே. ராஜபக்ச (என்கிற நாடன்)

இராணுவப் புலனாய்வு உறுப்பினர் எஸ்.எம். ரவீந்திர ரூபசேன (என்கிற ரஞ்சி)

இராணுவப் புலனாய்வுப் பிரிவு உறுப்பினர் சமிந்த குமார அபேயரத்ன

இராணுவப் புலனாய்வுப் பிரிவு உறுப்பினர் கனிஷ்க குணரத்ன

இராணுவப் புலனாய்வுப் பிரிவு உறுப்பினர் அய்யாசாமி பாலசுப்பிரமணியம்


இராணுவப் புலனாய்வுப் பிரிவு உறுப்பினர் தரங்க பிரசாத் கமகே    

No comments