பிள்ளையான் கும்பல் கூலி கொலையாளிகளா?





தென்னிலங்கையின் களுத்துறை பகுதியில் அமைந்துள்ள விடுதிக்குள் நுழைந்து, அதன் உரிமையாளர் மற்றும் அவரது மனைவியை சுட்டுக் கொலை செய்துவிட்டு தப்பியோடிய பிரதான கூலிப்படை துப்பாக்கித்தாரி பிள்ளையான் குழுவின் முன்னாள் உறுப்பினர் என தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் துப்பாக்கிதார் உள்ளிட்ட மூவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

மட்டக்களப்பு - நாவலடி பகுதியில் வைத்து காவல்துறையின் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்ட பிரதான துப்பாக்கித்தாரி, தமிழீழ மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பில் தொடர்புபட்டிருந்தவரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

ஆயுதங்களை மிகத் துல்லியமாகக் கையாளும் திறன் கொண்டவர் ஆயினும் அவரிடம் நடத்தப்பட்ட விசாரணைகளின் போது, தான் ஒரு புலி உறுப்பிவராகச் செயற்பட்டதாக அவர் எவ்வித வெளிப்படுத்தலையும் செய்யவில்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே இரட்டைப் படுகொலைக்கு உதவி ஒத்தாசை புரிந்த மற்றும் உளவு பார்த்தஇரு சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.


No comments