திலீபன் சிலை: 14பேரிடம் விசாரணையாம்!
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினரான திலீபனின் சிலை நிறுவப்பட்ட விவகாரம் தொடர்பில் முறையான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. சம்பவத்துக்கு உதவிய அரசியல்வாதிகள் உள்ளிட்ட 14 பேரிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக இலங்கை பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
அத்துடன் சிலையும் நிகழ்வில் காட்சிப்படுத்தப்பட்ட பொருட்களும் ஆதாரங்களாகக் கைப்பற்றப்பட்டுள்ளன. சட்டமா அதிபரின் ஆலோசனையின் அடிப்படையில் அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே யாழ்ப்பாணம், நல்லூர் தியாகதீபம் நினைவாலயத்தில் சிலை வைக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக, யாழ்ப்பாண மாநகர சபை முதல்வரிடம் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினர் சுமார் இரண்டு மணித்தியாலங்கள் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.
நேற்றைய தினம் (புதன்கிழமை) யாழ். மாநகர சபை முதல்வரின் உத்தியோகபூர்வ அலுவலகத்திற்குச் சென்ற விசாரணையை மேற்கொண்டுள்ளனர்.
திலீபன் விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர் என்பது தெரியும்; ஆனால் அவர் ஆயுதப் போராட்டத்தில் உயிரிழக்கவில்லை. அஹிம்சை வழியில் போராடியே உயிர் நீர்த்தார்."
சிலை எங்கு உருவாக்கப்பட்டது மற்றும் அதனை நிறுவியவர்கள் யார் என்பது உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்தும் முதல்வரிடம் விரிவாகக் கேட்டறியப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றில் வழக்குத் தொடரப்பட்டுள்ள நிலையில், அரசியல்வாதிகள் உட்பட பலரிடம் தொடர் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அந்த வரிசையில், 17ஆவது நபராக யாழ். மாநகர சபை முதல்வரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment