இரண்டு நாள் விஜயமாக இலங்கையை வந்தடைந்த இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்
இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை இலங்கையை வந்தடைந்துள்ளார்.
எதிர்வரும் 10 ஆம் திகதி வரை நாட்டில் தங்கியிருப்பதுடன் இந்த விஜயத்தின் போது இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மற்றும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட பலரைச் சந்திக்கவுள்ளார்.
இந்திய பாதுகாப்பு அமைச்சர் ஒருவர் இவ்வாறு இலங்கைக்கு வருகை தருவது 38 ஆண்டுகளுக்குப் பிறகு என்பதும் குறிப்பிடத்தக்க அம்சமாகும்

Post a Comment