திருவிழா முடிந்தது - இனி பேரணி!





செம்மணி சித்துப்பாத்தி புதைகுழியில் சாட்சியங்களாக சுமார் 600 மனித எலும்புக்கூடுகள் அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது.அத்தகைய சான்றுப் பொருட்கள் அரசிடம் இருப்பது, ஆதாரங்கள் அழிக்கப்படும் பேராபத்தை ஏற்படுத்தியுள்ளது.எனவே, ஐக்கிய நாடுகள் சபையின் முழுமையான பொறுப்பில் சர்வதேச தடயவியல் நிபுணர்களைக் கொண்டு செம்மணி உள்ளிட்ட அனைத்து மனிதப் புதைகுழிகளதும் அகழ்வாராய்ச்சி மற்றும் விசாரணைகள் உடனடியாக முன்னெடுக்கப்பட வேண்டுமென தமிழ் தேசிய மக்கள் முன்னணி அழைப்புவிடுத்துள்ளது.

ஏதிர்வரும் 13ம் திகதி ஞாயிற்றுக்கிழமை யாழ்;ப்பாணத்தில் பேரணிக்கு முன்னணி அழைப்பொன்றை விடுத்துள்ளது.

செம்மணி உள்ளிட்ட புதைகுழிகளை ஜநா மேற்பார்வையில் சர்வதேச நிபுணர்கள் அகழ்வு செய்ய வேண்டும்.

தமிழ் இனப்படுகொலைக்கு பாரபட்சமற்ற சர்வதேச குற்றவியல் விசாரணை வேண்டும்.

சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் மற்றும் சர்வதேச நீதிமன்றம் ஊடாக இலங்கைக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி: உள்ளகப் பொறிமுறைகள் தோல்வியடைந்ததால், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உண்மை அறியும் உரிமை மற்றும் நீதி கிடைக்க சர்வதேச விசாரணை வேண்டும்.

வடகிழக்கிலிருந்து இராணுவம் உடனடியாக வெளியேற வேண்டும்.

தையிட்டி, மயிலிட்டி, பலாலி, வயாவிளான், கேப்பாபிலவு உள்ளிட்ட ஆக்கிரமிக்கப்பட்ட தனியார் காணிகள் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும்.

தொல்லியல், வனவளத் துறைகளின் பெயரால் நடக்கும் திட்டமிட்ட இனப்பரம்பல் மாற்றங்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டுமென்ற கோரிக்கைகளை முன்வைத்தே தமிழ் தேசிய மக்கள் முன்னணி பேரணிக்கு அழைப்பு விடுத்துள்ளது.


No comments