பிரகீத் எக்னெலிகொடவின் மனைவி வென்றார்!
காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட தொடர்பில் அவதூறாக கருத்துக்களை வெளியிட்ட பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் மீண்டும் சிறை செல்லவுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு வழங்கப்பட்ட ஜனாதிபதி பொதுமன்னிப்பு தன்னிச்சையானது மற்றும் சட்டத்திற்கு முரணானது என்று இலங்கை உயர் நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை தீர்ப்பளித்துள்ளது.
காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர் பிரகீத்; எக்னெலிகொடவின் மனைவி மற்றும் மாற்றுக்கொள்கை மையத்திற்கான அமைப்பு என்பன தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனுக்களை விசாரித்த, நீதியரசர் ஜனக் டி சில்வா தலைமையிலான மூன்று நீதியரசர்கள் அடங்கிய உயர் நீதிமன்ற அமர்வு பொதுமன்னிப்பு இரத்து தீர்ப்பை வழங்கியுள்ளது.
காணாமல்போன ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவின் வழக்குத் தொடர்பாக ஹோமாகம நீதவான் நீதிமன்றத்தில் இடம்பெற்ற விசாரணையின்போது நீதிமன்றத்தை அவமதித்த குற்றத்திற்காக ஞானசார தேரருக்கு ஆறு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.
அதனைத் தொடர்ந்து, 2019 மே 23 அன்று ஜனாதிபதி பொதுமன்னிப்பின் கீழ் ஞானசார தேரர் வெலிக்கடை சிறைச்சாலையில் இருந்து விடுவிக்கப்பட்டிருந்தார்.
ஹோமாகம நீதவான் நீதிமன்றத்திற்குள் நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் நடந்துகொண்டமைக்காக, ஞானசார தேரருக்கு 2018 ஓகஸ்ட் மாதம் மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் 19 ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு, அவை ஆறு ஆண்டுகளாகக் குறைக்கப்பட்டு ஒரே நேரத்தில் அனுபவிக்குமாறு உத்தரவிடப்பட்டிருந்;தமை குறிப்பிடத்தக்கது

Post a Comment