இளங்குமரன் களவாடிய கைத்தொலைபேசி கதை?
கைத்தொலைபேசியை திருடிய திருடனென நாடாளுமன்றில் இன்று தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரனை நோக்கி நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார்.
அர்ச்சுனா இராமநாதன், “ஆடு திருடர்களையும், போன் திருடர்களையும் சபையில் அமர வைத்துள்ள அரசாங்கம், குற்றவாளிகளை கூண்டிலிடுவதாகக் கூறுவது ஏற்றுக்கொள்ளத்தக்க விடயம் அல்ல” எனக் குறிப்பிட்டார்.
அதற்கு பதிலளித்த நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன், தமக்கு எதிராக் காவல்துறையில் ஏதேனும் வழக்குகள் உள்ளனவா என்பது தொடர்பில் தெளிவுபடுத்துமாறு கோரிக்கை விடுத்தார்.
மேலும், குற்றச்சாட்டு தொடர்பான வழக்கு தற்போது நீதிமன்றில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
அதற்கு பதிலளித்த அர்ச்சுனா இராமநாதன், நாடாளுமன்றக் கூட்டத்தை கூட்டுமாறும், தாம் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பான உண்மைத்தன்மையை வெளிப்படுத்தத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.
“நாடாளுமன்றக் கூட்டத்தை கூட்டுங்கள். குற்றச்சாட்டுக்கள் குறித்த உண்மைத்தன்மையை வெளிப்படுத்துகின்றேன். அப்படியானால் அனைவரும் பதவி விலகுவீர்களா?” எனவும் அர்ச்சுனா இராமநாதன் சவால் விடுத்துள்ளார்.

Post a Comment