யாழில். டிப்பர்கள் மீது துப்பாக்கி சூடு - இருவர் கைது


யாழ்ப்பாணத்தில் சட்டவிரோதமான முறையில் மணல் ஏற்றி சென்ற டிப்பர் வாகனங்கள் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டு , வாகனங்கள் மடக்கி பிடிக்கப்பட்டுள்ளதுடன் , அதன் சாரதிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர் 

மீசாலை வடக்கு - புத்தூர் வீதியில் பயணித்த இரண்டு டிப்பர் வாகனங்களை வீதி சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் விசேட அதிரடி படையினர் மறித்துள்ளனர். 

அதிரடி படையினரின் கட்டளைகளை மீறி டிப்பர் வாகன சாரதிகள் வாகனத்துடன் தப்பி செல்ல முற்பட்ட வேளை , வாகனங்களின் டயர்களை இலக்கு வைத்து , அதிரடி படையினர் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டனர் 

டயர்களில் துப்பாக்கி சூடு விழுந்ததில் வாகனம் மேற்கொண்டு பயணிக்க முடியாததால் , சாரதிகள் வாகனத்தில் இருந்து இறங்கி தப்பி செல்ல முற்பட்ட வேளை அவர்களை அதிரடி படையினர் மடக்கி பிடித்து கைது செய்தனர் 

கைது செய்யப்பட்ட இரண்டு சாரதிகள் மற்றும் மணலுடன் கைப்பற்றப்பட்ட டிப்பர் வாகனம் என்பவற்றை மேலதிக சட்ட நாடாவடிக்கைக்காக , அதிரடி படையினர் கொடிகாம பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர் 


No comments