நல்லூரில் தியாக தீபத்தின் 06ஆம் நாள்
ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து நீராகாரமின்றி உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த தியாக தீபம் திலீபனின் 39வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் உணர்வெழுச்சியாக நடைபெற்று வரும் நிலையில் ஆறாம் நாள் நிகழ்வுகள் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை நல்லூரில் உள்ள தியாக தீபத்தின் நினைவிடத்தில் நடைபெற்றது
அதன் போது மாவீரர் சேரமானின் மகன் துஷாந்தன் ஈகை சுடரினை ஏற்றியதை தொடர்ந்து , தியாக தீபத்தின் திருவுருவ படத்திற்கு மலர் மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தப்பட்டது





Post a Comment