நல்லூர் தேர் திருவிழா


வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர தேர்த்திருவிழா இன்றைய தினம் புதன்கிழமை காலை நடைபெற்றது.

கடந்த 17ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமான திருவிழா தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், இன்றைய தினம் புதன்கிழமை காலை 06.15 மணிக்கு வசந்தமண்டப பூஜை ஆரம்பமாகி ,தொடர்ந்து ஆறுமுக சுவாமி தேரில் ஆரோகணித்து பக்தர்களுக்கு அருட்காட்சியளித்தார்.

தேர் திருவிழாவின் போது, நாட்டின் பல பாகங்களில் இருந்தும், புலம்பெயர் தேசங்களிலும் இருந்தும் இலட்ச   கணக்கான பக்தர்கள் ஆறுமுக சுவாமியின் அருட்காட்சியினை கண்டு களிக்க ஒன்று கூடினர்.

காவடிகள் , பிரதட்டைகள் , கற்பூர சட்டி என பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் தமது நேர்த்தி கடன்களை நிறைவேற்றினர் 






No comments