நெடுந்தீவில் கரை ஒதுங்கிய தமிழகமீனவர்கள்!
யாழ் நெடுந்தீவு கடற்பரப்பிற்குள் இந்திய மீன்பிடிப் படகொன்று விபத்துக்குள்ளாகியுள்ள நிலையில் படகிலிருந்த மீனவர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.
சட்டவிரோதமாக நுழைந்து கடற்படி நடவடிக்கையில் ஈடுபட்ட மீன்பிடிப் படகே விபத்திற்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
விபத்தையடுத்து இலங்கை கடற்படை விசேட தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கையை ஆரம்பித்ததாக கடற்படை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இலங்கை கடற்பரப்பிற்குள் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டிருந்த 11 பேரைக் கொண்ட இந்திய மீன்பிடிப் படகொன்று நேற்று இரவு விபத்துக்குள்ளானது என கடற்படை பேச்சாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.
பாதிக்கப்பட்ட மீன்பிடிப் படகில் இருந்தவர்களை மீட்கும் பொருட்டு இலங்கை கடற்படையின் மீட்புக் குழுவினர் மீட்புப் பணிகளை முன்னெடுத்தாக தெரவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment