வாய் மூடி இருக்க கோரும் இலங்கை!
இந்திய வெளியுறவுச் செயலாளரின் இலங்கை விஜயத்தின் போது மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்தவும் தமிழ் மக்களின் உரிமைகளை உறுதி செய்யவும் இந்தியா வலியுறுத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது.
எனினும் இலங்கை அரசு அதனை மூடிமறைக்க முற்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளது.
ஜனாதிபதி ஊடகப்பிரிவு அதனை முன்னெடுத்துள்ளதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுமுள்ளது.
இந்திய வெளியுறவுச் செயலாளராகப் பொறுப்பேற்ற பின்னர் முதன்முறையாக இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்ட விக்ரம் மிஸ்ரி, இலங்கை ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மற்றும் வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோரைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார்.
நீண்டகாலமாக தாமதிக்கப்பட்டு வரும் மாகாண சபைத் தேர்தல்களை விரைவாக நடத்த நடவடிக்கை எடுக்குமாறு இலங்கை அரசை இந்தியா கேட்டுக்கொண்டது. மேலும், தமிழ் மக்களின் கலாச்சார மற்றும் அரசியல் விருப்பங்களைப் பூர்த்தி செய்யும் வகையில் அரசியலமைப்பு விதிகளை முழுமையாக அமல்படுத்துவதன் முக்கியத்துவத்தையும் இந்திய வெளியுறவுச் செயலர் வலியுறுத்தியதாக இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.
அப்போது இலங்கை மண்ணை இந்தியாவின் பாதுகாப்புக்கு எதிராகப் பயன்படுத்த அனுமதிக்க மாட்டோம் என்று ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க அளித்த உறுதிமொழியை வரவேற்பதாகக் குறிப்பிட்ட மிஸ்ரி, இது இருநாடுகளுக்கும் இடையிலான வலுவான இருதரப்பு உறவுக்கு அடித்தளமாக அமையும் என தெரிவித்ததாக இலங்கை ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

Post a Comment