பாங்காக் மதுபான விடுதி தீ விபத்தில் 27 பேர் உயிரிழந்தனர்
தாய்லாந்தின் தலைநகர் பாங்காக்கின் வடக்குப் பகுதியில் உள்ள பிரபலமான மதுபான விடுதி (பப்) ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 27 பேர் உயிரிழந்தனர் மற்றும் 63 பேர் காயமடைந்தனர்.
உயிரிழந்த இருபத்தேழு உடல்கள் அப்புறப்படுத்தப்பட்டன. பாதிக்கப்பட்டவர்களில் பலர், மதுபான விடுதியின் பின்புறம் உள்ள கழிவறைகளில் கண்டெடுக்கப்பட்டனர்.
மதுபான விடுதியின் முன் வாசலில் இருந்து பெரும் தீ கொழுந்துவிட்டு எரிவதையும், புகை மண்டலங்கள் வெளியேறுவதையும், முதன்மை மீட்புக் குழுவினர் இணையத்தில் பகிர்ந்த காணொளிக் காட்சிகள் காட்டின.
தீயணைப்பு வீரர்கள் தீயைக் கட்டுக்குள் கொண்டுவர சுமார் அரை மணி நேரம் எடுத்துக்கொண்டனர்.

Post a Comment