யேர்மனி ஊர்வலத்தில் கார் மோதியது: ஒருவர் பலி! 16 பேர் காயம்!
யேர்மனியின் பேர்லின் நகரில் நடைபெற்ற பிரைட் அணிவகுப்பின் போது, கூட்டத்தின் மீது மகிழுந்து ஒன்று மோதியதில் ஒருவர் உயிரிழந்ததாகவும், 16 பேர் காயமடைந்ததாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பேர்லினின் டியர்கார்டன் பூங்காவிற்கு அருகே இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
காயமடைந்தவர்களில் பலர் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
அதே இடத்தில் நடைபெறவிருந்த இந்த நிகழ்ச்சி, பாதுகாப்பு நடவடிக்கையாக உடனடியாக இடைநிறுத்தப்பட்டதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Post a Comment