இங்கிலாந்து இலக்காகலாம் என ஈரான் எச்சரிக்கை
ஈரான் மீதான அமெரிக்காவின் தாக்குதல்களுக்கு ஆதரவளிக்கும் பட்சத்தில், இங்கிலாந்து, வளைகுடாக் கடற்கரை நாடுகள் அல்லது பிற நாடுகள் என எந்தவொரு நாடும் ஒரு சட்டபூர்வமான இலக்காக மாறும் என்று ஐ.ஆர்.ஜி.சி செய்தித் தொடர்பாளர் ஒருவர் ஈரானின் அரசு ஒளிபரப்பு நிறுவனமான ஐ.ஆர்.ஐ.பி-யிடம் தெரிவித்துள்ளார்.
பெயர் குறிப்பிடப்படாத அந்த செய்தித் தொடர்பாளர் சமீபத்திய தாக்குதல்களை நடத்துவதற்கு அமெரிக்க பி-1 ரக குண்டுவீச்சு விமானங்கள் பிரிட்டிஷ் விமான நிலையங்களைப் பயன்படுத்தியதாகக் கூறி ஈரான் போரில் பிரித்தானியாவின் பங்கை எடுத்துரைத்தார்.
அவர்கள் [அமெரிக்காவுடன்] ஒத்துழைத்தால், அவர்களே எங்களின் திட்டவட்டமான மற்றும் நியாயமான இலக்காக இருப்பார்கள் என்று அந்தப் பேச்சாளர் கூறினார்.
தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகக் கருதப்படும் வெளிநாட்டு அரசு அமைப்புகளைப் பட்டியலிட அனுமதிக்கும் புதிய நடவடிக்கைகளின் கீழ், பிரித்தானியா அரசாங்கம் ஐ.ஆர்.ஜி.சி-யை ஒரு பயங்கரவாத அமைப்பாக அறிவித்த இரண்டு வாரங்களுக்குப் பின்னர் இது இந்த அறிவிப்பு வந்துள்ளது.
ஐ.ஆர்.ஜி.சி-க்கு ஆதரவளிப்பவர்கள் அல்லது உதவுபவர்களுக்கு 14 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என பிரித்தானியா கூறுகிறது.

Post a Comment