வடக்கு ஈரானில் தொடருந்துப் பாலம் அமெரிக்கத் தாக்குலில் தேசமடைந்தது!
ஈரானின் வடக்கு நகரமான அக்காலாவில் உள்ள ரயில்வே பாலம் சேதமடைந்ததைக் காட்டும் காணொளிகளும் படங்களும் வெளியாகியுள்ளன.
காஸ்பியன் கடலுக்குக் கிழக்கே சுமார் 40 கி.மீ தொலைவில் உள்ள ஈரானின் கோலெஸ்தான் மாகாணத்தில் அமைந்துள்ள அக் டெக்கே கான் ரயில்வே பாலத்தில் ஏற்பட்ட சேதத்தை, இரவோடு இரவாகப் படமாக்கப்பட்ட இரண்டு காணொளிகள் காட்டுகின்றன.
இன்று காலை ஈரானிய ஊடகங்களால் வெளியிடப்பட்ட புகைப்படங்களில், பாலத்தில் ஒரு துளையும் பள்ளமும் இருப்பதும், ரயில் தண்டவாளம் சேதமடைந்திருப்பதும், சிதிலங்கள் ஆங்காங்கே சிதறிக் கிடப்பதும் தெரிகின்றன.
அந்தப் பாலம் அமெரிக்காவின் குரூஸ் ஏவுகணையால் குறிவைக்கப்பட்டதாகவும், ஆனால் அதில் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை என்றும் இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படை (IRGC) தெரிவித்துள்ளது.

Post a Comment