குவைத், பஹ்ரைன் மீது ஈரான் தாக்குதல்!!
குவைத், பஹ்ரைன் மீது ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது. அமெரிக்கா நடத்திய தாக்குதலுக்கு பதிலடி எனக்கூறி குவைத், பஹ்ரைன் மீது தாக்குதலை ஈரான் நடத்தியுள்ளது.
பஹ்ரைனின் ஷேக் ஐசா விமானப்படைதளம், குவைத்தின் விமான நிலையம் உள்பட இரு நாடுகளின் பல்வேறு பகுதிகளை குறிவைத்து ஏவுகணைகள் மூலம் ஈரான் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த விவரம் இதுவரை வெளியாகவில்லை.
ஓமன் வளைகுடா பகுதியில் ஹர்முஸ் ஜலசந்தியை கடக்க முயன்ற 3 சரக்கு கப்பல்கள் மீது ஈரான் நேற்று ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது. ஹர்முஸ் ஜலசந்தியில் ஓமனின் லிமாஹ் பகுதியில் அருகே சென்றுகொண்டிருந்த கத்தார், சவுதி அரேபியா நாடுகளுக்கு சொந்தமான சரக்கு கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது.
வணிகக் கப்பல்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு பதிலடி எனக்கூறி ஈரான் மீது அமெரிக்கா இன்று தாக்குதல் நடத்தியது. தெற்கு ஈரானின் சிரிக், குவாசிம் தீவு, பண்டர் அப்பாஸ், கார்க் தீவு ஆகிய பகுதிகள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியது. ஈரானின் ரேடார் அமைப்பு, ஏவுகணை அமைப்பு, ஆயுத கிடங்குகள் உள்பட 80 இலக்குகளை குறிவைத்து அமெரிக்கா தாக்குதல் நடத்தியுள்ளது.

Post a Comment