கடந்த 24 மணி நேரத்தில் 1300 டெங்கு நோயாளிகள்
கடந்த 24 மணி நேரத்தில் 1300 டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.
மொத்த டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை 65034 ஆகப் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் பதில் பணிப்பாளர், டாக்டர் கபில கன்னங்கரா தெரிவித்தார் .
டெங்குவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆகும். டெங்கு ஒழிப்புப் பணியின் நான்காவது நாள் இன்று. ஏராளமான பகுதிகள் குழுக்களால் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. 23 பிரிவுகளில் சுகாதார மருத்துவ அலுவலர்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர். இருப்பினும், களுத்துறை, கம்பஹா, கொழும்பு ஆகிய பகுதிகளில் உள்ள பல இடங்களுக்கு சிவப்பு அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.
சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இப்பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கொசுக்கள் பெருகும் இடங்களைக் கண்டறிந்து, அவற்றைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Post a Comment