சிறைச்சாலை உத்தியோகத்தர் வசமிருந்த ஆயுதங்கள் நீதிமன்றில்!
நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் தொடர்பில் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் விரிவான விசாரணைகள் முன்னெடுத்துள்ளது. இதுவரையில் 1,200 கைதிகளிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. சிறைச்சாலை உத்தியோகத்தர் வசமிருந்த ஆயுதங்கள் நீதிமன்றில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.
போதைப்பொருளுக்கு எதிராக கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் முதல் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் சம்பவமானது போதைப்பொருள் குற்றத்தின் விளைவாகும். போதைப்பொருள் வலைப்பின்னலுடன் தொடர்புடைய தரப்பினருக்கும், அதற்கு எதிர்ப்பு தெரிவித்த தரப்பினருக்கும் இடையிலான முரண்பாடு இவ்வாறு மோதலாக உருவெடுத்தது.
போதைப்பொருளுக்கு எதிரான சுற்றிவளைப்பில் இதுவரை 2 இலட்சத்துக்கும் அதிகமானோர் கைது செய்யப்பட் பலருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. போதைப்பொருள் பாவனையாளர்களை நோயாளிகளாக கருதி அவர்களுக்கு நிவாரணமளிக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.

Post a Comment