கடைசி வரை கதிரையினை விட்டுக்கொடுக்காத தமிழரசு!
கதிரைக்காக கடைசி வரை கட்டியழுவதில் இலங்கை தமிழரசுக்கட்சியை ஒருவரும் அசைக்க முடியாதேயுள்ளது.இந்நிலையில் தேசிய மக்கள் சக்தி மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஆதரவுடன் சாவகச்சேரி நகர சபையின்; புதிய உப தவிசாளராக முத்துலிங்கம் கோகுலராஜ் திருவுளச்சீட்டு மூலம் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
சாவகச்சேரி நகர சபையின் உப தவிசாளர் தெரிவு இன்றைய தினம் (28) காலை நடைபெற்ற போதே கோகுலராஜ் தெரிவு செய்யப்பட்டார்.
உள்ளூராட்சி ஆணையாளரால் விடப்பட்ட சுற்றறிக்கையை சபையில் விமர்சித்து, அதனை தூக்கி வீசியதாக சாவகச்சேரி நகர சபையின் முன்னாள் உப தவிசாளர் ஞா.கிசோர் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டிருந்தது.
குற்றச்சாட்டு தொடர்பில், வடக்கு மாகாண ஆளுநரால் நியமிக்கப்பட்ட தனிநபர் விசாரணை அதிகாரியின் விசாரணை அறிக்கையின் பரிந்துரைக்கு அமைய உப தவிசாளர் பதவியும் அவரது சபை உறுப்புரிமையும் கடந்த ஜூன் மாதம் 24ஆம் திகதி ஆளுநரின் வர்த்தமானி அறிவித்தல் ஊடாக வறிதாக்கப்பட்டது.
அதன் அடிப்படையில் இன்றைய தினம் புதிய உப தவிசாளர் தெரிவுக்காக சபை அமர்வு ஆரம்பிக்கப்பட்ட போது தமிழரசுக் கட்சியின் சார்பிலும், ஜனநாயக தமிழ்தேசிய கூட்டணி சார்பிலும் இருவர் போட்டியிட்டனர்.
அதில் தமிழரசுக் கட்சி சார்பில் போட்டியிட்டவருக்கு, தமிழரசு கட்சியின் 6 உறுப்பினர்களும், ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் ஒரு உறுப்பினரும் வாக்களித்தனர்.
ஜனநாயக தமிழ்தேசிய கட்சியின் சார்பில் போட்டியிட்டவருக்கு, அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் 6 உறுப்பினர்களும், ஜனநாயக தமிழ் தேசிய கட்சியின் ஒரு உறுப்பினரும் வாக்களித்ததுடன் தேசிய மக்கள் சக்தியின் இரு உறுப்பினர்களும் வாக்களிப்பில் ஈடுபடாமல் நடுநிலை வகித்தனர்.
சாவகச்சேரி நகர சபையானது, 18 உறுப்பினர்களை கொண்ட சபையாகும். அதில் தமிழரசுக் கட்சியின் 06 உறுப்பினர்கள், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் 06 உறுப்பினர்கள், ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் இரண்டு உறுப்பினர்களும் உள்ள நிலையில் அதில் ஞா. கிசோரின் உறுப்புரிமை வறிதாக்கப்பட்டுள்ளது.
அதேவேளை குறித்த உப தவிசாளர் தெரிவினை நடத்த இடைக்கால தடை விதிக்குமாறு வடக்கு மாகாண மேல் நீதிமன்றத்தின் யாழ்ப்பாண அமர்வில் முன்னாள் உப தவிசாளர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணியின் கோரிக்கையை மன்று நிராகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment