மண்டைதீவு புதைகுழி :நீதி கோரும் ஈபிடிபி!
இலங்கை படைகளால் அரங்கேற்றப்பட்ட மண்டைதீவு படுகொலையின் வழக்கு விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில் மீண்டும் எதிர்வரும் செப்ரெம்பர் 22 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மண்டைதீவு புதைகுழி தொடர்பான வழக்கின் விசாரணை இன்று (28) ஊர்காவற்றுறை நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு காவல்துறையினரால் மேலதிக சான்றுகள் சமர்ப்பிக்கப்பட்டது.
வழக்கின் போது வழக்காளிகளின் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் புதைகுழி அடையாளப்படுத்தப்பட்ட இடத்திற்கு காவல்துறை பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும், அடையாளப்படுத்தப்பட்ட காணியின் உரித்து யாருடையது என்பதை உறுதி செய்து அறிக்கை பெற்றுக் கொள்ளவேண்டும் என்றும், நீதிமன்றில் ஈபிடிபி சார்பு பிரதேசசபை உறுப்பினரான பெண்மணியொருவர் கோரிக்கை முன்வைத்திருந்தார்.
இதனிடையே செம்மணி மனித புதைக்குழி விவகாரத்தில் உண்மையான குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு உரிய தண்டனை வழங்கப்படும் என நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் உறுதியளித்துள்ளார்.
அந்த பேரவலத்திற்கு தமிழீழ விடுதலைப் புலிகளா, இந்திய அமைதிப்படையினரா அல்லது இலங்கை ஆயுதப்படைகளா காரணம் என்பது தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளின் இறுதியிலேயே முழுமையாகத் தெரியவரும்" எனவும் விளக்கமளித்திருந்தார்.

Post a Comment