கிசோரின் பதவி பறிப்பு - வடமாகாண ஆளுநரின் வர்த்தமானிக்கு இடைக்கால தடை விதிக்க மன்று மறுப்பு
சாவகச்சேரி நகர சபையின் உப தவிசாளரின் பதவி மற்றும் உறுப்பினர் பதவியை வறிதாக்கிய வடமாகாண ஆளுநரின் சுற்று நிரூபத்திற்கு இடைக்கால தடை கட்டளை வழங்க யாழ்ப்பாணம் மாவட்ட மேல் நீதிமன்றம் மறுத்துள்ளது.
உள்ளூராட்சி ஆணையாளரின் சுற்று நிரூபத்தை சபையில் கடுமையாக விமர்சித்து , அதனை தூக்கி வீசினார் எனும் குற்றச்சாட்டில் நகர சபையின் உபதவிசாளர் ,வடமாகாண ஆளூநரால் கடந்த 24ஆம் திகதி வெளியிடப்பட்ட விசேட வர்த்தமானி அறிவித்தல் ஊடாக உபதவிசாளர் பதவி மற்றும் உள்ளூராட்சி உறுப்பினர் பதவி ஆகியவை வறிதாக்கப்பட்டது.
இந்நிலையில் ஆளுநரின் வர்த்தமானி அறிவித்தலை இரத்து செய்ய வேண்டும் எனவும். வர்த்தமானி அறிவித்தலுக்கு இடைக்கால தடையுத்தரவு வழங்க கோரியும் சாவகச்சேரி நகர சபை முன்னாள் உப தவிசாளர் சார்பில் மன்றில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
குறித்த மனு மீதான விசாரணை இன்றைய தினம் திங்கட்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, வர்த்தமானி அறிவித்தலுக்கு இடைக்கால தடை வழங்க மறுத்த நீதிமன்று , எதிர்மனு தாரர்களுக்கு அழைப்பு கட்டளை வழங்க கட்டளையிட்டுள்ளதுடன் ,வழக்கினை மன்று ஒத்திவைத்துள்ளது

Post a Comment