யாழில் தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி காணி உரிமையாளர்கள் ஆர்ப்பாட்டம்
யாழ்ப்பாணம், வலிகாமம் வடக்கு பகுதிகளில் உயர் பாதுகாப்பு வலயமாக உள்ள தமது சொந்தக் காணிகளை உடனடியாக விடுவிக்குமாறு கோரி, காணி உரிமையாளர்கள் இராணுவத்தினரின் "கொமாண்டோ" பங்களாவுக்கு முன்பாக இன்று வெள்ளிக்கிழமையும் (19) தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஒவ்வொரு வெள்ளிக்கிழமையிலும் நடத்தப்படும் போராட்டங்களின் தொடர்ச்சியாக நடந்த இன்றைய ஆர்ப்பாட்டத்தில் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன், காணி உரிமையாளர்கள், பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டனர்.இலங்கை செய்திகள்
வலி. வடக்கில் 249, 256, 248, 251 மற்றும் 255 ஆகிய கிராம சேவையாளர் பிரிவுகளைச் சேர்ந்த மக்கள் 1990ஆம் ஆண்டு ஜூன் மாத கால பகுதியில் அவர்களது சொந்த இடங்களில் இருந்து வெளியேற்றப்பட்ட பின்னர், அப்பகுதி உயர் பாதுகாப்பு வலயமாக காணப்படுகிறது.
யுத்தம் முடிவடைந்து 17 வருடங்கள் கடந்த நிலையிலும், அப்பகுதிகளில் இருந்து பாதுகாப்பு தரப்பினர் வெளியேறாத நிலையில், அவை உயர்பாதுகாப்பு வலயமாகவே காணப்படுகிறது.


Post a Comment