பஹ்ரைனைத் தாக்கிய ஈரானிய ஆளில்லா விமானங்கள்!


இன்று சனிக்கிழமையன்று ஈரானிய ஆளில்லா விமானங்கள் தங்கள் பிரதேசத்தைத் தாக்கியதாகவும், இந்தத் தாக்குதல் குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்களுக்கு விடுக்கப்பட்ட அப்பட்டமான அச்சுறுத்தல் என்றும் பஹ்ரைன் கூறியுள்ளது.

இந்தத் தாக்குதல்கள் அமைதி முயற்சிகளைச் சீர்குலைக்கின்றன என்று அது எச்சரித்தது.

இடங்களைக் குறிப்பிடாமல், அப்பகுதியில் உள்ள அமெரிக்கப் படைகளுடன் தொடர்புடைய இலக்குகள் மீது தாக்குதல்களை நடத்தியதாக ஈரான் முன்னதாகக் கூறியிருந்தது.

ஹோர்முஸ்  நீரிணையிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் தொடர்ச்சியாக அதிகரித்து வரும் தாக்குதல்களைத் தொடர்ந்து இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. வளைகுடாவில் உள்ள அமெரிக்க இலக்குகள் மீது தாக்குதல் நடத்தி பதிலடி கொடுத்ததாக தெஹ்ரான் கூறியுள்ளது.

நேற்று வியாழக்கிழமை ஹோர்முஸ் நீரிணையை விட்டு வெளியேற முயன்ற கப்பல் ஒன்றை ஈரானிய ஆளில்லா விமானம் குறிவைத்ததைத் தொடர்ந்து, அமெரிக்கா வான்வழித் தாக்குதல்களை நடத்தியது.


பஹ்ரைன், அமெரிக்க கடற்படையின் ஐந்தாம் படைப்பிரிவுக்குத் தளமாக இருப்பதுடன், ஈரானின் கடுமையான விமர்சகராகவும் இருந்து வருகிறது.

No comments