ஈரான் மீது அமெரிக்காவின் இரண்டாவது நாள் தாக்குதல்: பஹ்ரைன் மற்றும் குவைத் மீது ஈரான் தாக்குதல்!
ஹோர்முஸ் நீரிணைக்கு அருகே வர்த்தகக் கப்பல் மீது நடத்தப்பட்ட ஆளில்லா விமானத் தாக்குதலைத் தொடர்ந்து , அமெரிக்கா இரண்டாவது நாளாக ஈரானின் கெஷ்ம் தீவு மற்றும் சிரிக், பந்தர்-இ லெங்கே நகரங்கள் மீது வான்வழித் தாக்குதலைக்ளை நடத்தியுள்ளது.
இதற்குப் பதிலடியாக பஹ்ரைன் மற்றும் குவைத்தில் உள்ள அமெரிக்கப் படைகள் மீது பதிலடித் தாக்குதல்களை நடத்தியுள்ளதாகவும், மேலும் தாக்குதல்கள் நடத்தப்பட்டால் நசுக்கலான பதிலடி கொடுக்கப்படும் என்றும் ஈரான் எச்சரித்துள்ளது.
வாஷிங்டனுக்கும் தெஹ்ரானுக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை ஈரான் மீறிவிட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் குற்றம் சாட்டியதோடு அந்தப் பணியை இராணுவ ரீதியாக முடித்து வைப்போம் என்றும் அச்சுறுத்தியுள்ளார்.

Post a Comment