பிள்ளையானிடமுள்ளவை சரத் பொன்சேகா வழங்கியவையா!
முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகாவின் உத்தரவின் பேரிலேயே பாதுகாப்பு அமைச்சகத்திடமிருந்து தனக்கு ஆயுதங்கள் வழங்கப்பட்டதாகக் கூறுமாறு, தடுப்பு காவலில் உள்ள பிள்ளையானுக்கு உதய கம்மன்பில அறிவுறுத்தியுள்ளதாக் சரத் பொன்சேகா குற்றஞ்சுமத்தியுள்ளார்.
பாதுகாப்பு அமைச்சின் மூலம் பிள்ளையானின் குழுவிற்கு 356 டி-56 ரக துப்பாக்கிகள், 36 எண் 9மிமீ கைத்துப்பாக்கிகள் மற்றும் ஒரு மேஜிக்ரோ வகை துப்பாக்கி உட்பட மொத்தம் 400-க்கும் மேற்பட்ட ஆயுதங்கள் வழங்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், சம்பந்தப்பட்ட ஆயுதங்கள் இதுவரை பாதுகாப்பு அமைச்சகத்திடம் திரும்ப ஒப்படைக்கப்படவில்லை என்று குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
அதன்படி, தங்கள் கட்சிக்காரரை நீதிமன்றத்தில் வேண்டுமென்றே ஒரு பொய்யான வாக்குமூலத்தை அளிக்குமாறு சட்டத்தரணி உதய கம்மன்பில அறிவுறுத்துவது சட்ட நெறிமுறைகளை முற்றிலும் மீறும் செயலாகும் .
எனவே, நெறிமுறை மீறல் நடவடிக்கைக்கு உதய கம்மன்பிலவுக்கு எதிராக மேன்துறையீடு செய்ய முடியும் என்றும் சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார்.
இறுதி யுத்த காலப்பகுதியில் இலங்கை படைகளுடன் இணைந்து பணியாற்ற தனது ஆயுததாரிகளை பிள்ளையான் -கருணா தரப்பு வழங்கியிருந்தாக குற்றச்சாட்டுக்கள் எழுப்பப்பட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment