பிள்ளையான் வெளியே வர சாத்தியமில்லை!



அடிப்படை மனித உரிமை மீறல் வழக்கில் பிணையில் வெளியே வர  முற்பட்டுள்ள நிலையில் கிழக்கு பல்கலைக்கழகப் பேராசிரியர் சுப்பிரமணியம் ரவீந்திரநாத் கொலை தொடர்பில் சிவனேசதுரை சந்திரகாந்தன் அல்லது பிள்ளையானுக்கு எதிராக குற்றப்பத்திரிகை ஒன்று தற்போது தயாரிக்கப்பட்டு வருவதாக சட்டமா அதிபர் திணைக்களம் உச்ச நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது.

பிள்ளையானால் நடத்திவரப்பட்ட முகாமில் வைத்து கொல்லப்பட்டார் என்பதற்கான நேரில் கண்ட சாட்சியங்களும், கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேக நபர்கள் அளித்த இரகசிய வாக்குமூலங்கள் தொடர்பில் சட்டமா அதிபர் திணைக்களம் வெளிப்படுத்தியுள்ளது.

தனது கைது மற்றும் தடுப்புக்காவல் சட்டவிரோதமானது எனத் தெரிவித்து பிள்ளையானால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனு அண்மையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட சந்தர்ப்பத்தில், சட்டமா அதிபர் திணைக்களம் புதிய குற்றச்சாட்டுக்களிற்கான சான்றுகளை வெளிப்படுத்தியுள்ளது.

பொலன்னறுவை செவனபிட்டிய பிரதேசத்தில் சட்டவிரோத முகாம் ஒன்றை நடத்தி எதிர்ப்பாளர்களுக்கும் பல்வேறு நபர்களுக்கும் சித்திரவதை செய்தமை தொடர்பில் பிள்ளையானிற்கு எதிராக வலுவான விடயங்கள் விசாரணைகள் மூலம் வெளிவந்துள்ளது.

கிழக்கு பல்கலைக்கழகப் பேராசிரியர் சுப்பிரமணியம் ரவீந்திரநாத் அந்த முகாமில் வைத்து கொல்லப்பட்டார் என்பதற்கான நேரில் கண்ட சாட்சியங்களும், கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேக நபர்கள் அளித்த இரகசிய வாக்குமூலங்களும் இருப்பதாகவும் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


No comments