300:தாண்டியது செம்மணி புதைகுழி!
செம்மணி - சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் அகழ்வு தொடர்கின்ற நிலையில் மீட்கப்படும் எலும்புக்கூட்டுத்தொகுதியின் எண்ணிக்கை 300 இனை தாண்டிச்செல்லலாமென அவதானிகள் எச்சரித்துள்ளனர்.
இன்று வெள்ளிக்கிழமை முன்னெடுக்கப்பட்ட அகழ்வில் புதிதாய் அடையாளப்படுத்தப்பட்ட 13 எலும்புக்கூடுகளுடன் சேர்த்து அங்கு மொத்தமாக அடையாளம் காணப்பட்ட எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை 296 ஆக அதிகரித்துள்ளது.
அத்துடன் இன்று அகழ்ந்து எடுக்கப்பட்ட 3 சிறுவர்களுடையதுட்பட 11 பேரின் எலும்புக்கூடுகளுடன் சேர்த்து அங்கிருந்து பரிசோதனைக்காக அகழ்ந்து எடுக்கப்பட்ட எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை 290 ஆகவும் உயர்ந்துள்ளது.
மேலும் செம்மணி மயான புதைகுழி அகழ்வுத்தளத்திற்குள் எலும்புக்கூடுகளுக்கு மத்தியில் காணப்பட்ட பெரிய இரும்புத்தகர துண்டு ஒன்றும் மீட்கப்பட்டு சான்றுப் பொருளாக இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளது.
ஏற்கனவே புதைகுழியின் காலப்பகுதி தொடர்பில் பலத்த சந்தேகம் முன்வைக்கப்பட்டுவருகின்றது.
யாழ்.குடாநாடு படைகளால் கைப்பற்றப்பட்ட 1996ம் ஆண்டு காலப்பகுதியில் சிறார்கள் உட்பட குடும்பமாக காணாமலாக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை பெரிய அளவில் இருந்திருக்கவில்லை.
இந்நிலையில் இறுதி யுத்த காலத்தில் குடும்பம் குடும்பமாக சரணடைந்தவர்கள் தொடர்பில் தற்போது சந்தேககங்கள் முன்வைக்கப்பட்டுவருகின்றது.

Post a Comment