வரிசையில் அடித்துக்கொலை?



செம்மணி - சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் இன்றைய அகழ்வில் புதிதாக அடையாளப்படுத்தப்பட்ட 7 எலும்புக்கூடுகளில் 3 எலும்புக்கூடுகள் ஒரே நேரில் புதைக்கப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது.அவர்கள் வரிசையில் நிற்க வைத்து அடித்துப்படுகொலை செய்யப்பட்டமை அதன் மூலம் உறுதியாகியுள்ளது.

குறிப்பாக ஒன்றுக்கு ஒன்று கீழாக வரிசையாக அந்த எலும்புக்கூடுகள் புதைக்கப்பட்டிருந்ததை அவதானிக்கக் கூடியாத இருந்தது.

அந்த 3 எலும்புக்கூடுகளும் பெரியவர்களுடையாதவும் காணப்படுகிறதென தகவல்கள் தெரிவிக்கின்றன.

செம்மணி சிந்துபாத்தி மனித புதைகுழி அகழ்வு பணிகள் இன்றைய தினம் 31 வது நாளாக யாழ்ப்பாண நீதிவான் நீதிமன்ற நீதவான் எஸ்.லெனின்குமார் முன்னிலையில் நடைபெற்றது.

இன்றுடன் 412 மனித என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றுள் 390 எலும்பு எச்சங்கள் துப்புரவாக்கப்பட்டு அடையாளம் இடப்பட்டு அகழ்ந்தெடுக்கப்பட்டு நீதிமன்றத்தின் கட்டுக்காவலில் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது.

இன்றையதினம் 07 என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்ட நிலையில் அவற்றில் 03 என்புகள் ஒரே நேரில் புதைக்கப்பட்டவாறு காணப்படுகிறது. மேலும் 09 என்புத் தொகுதிகள் நேர் சீரின்றி புதைக்கப்பட்டுள்ளது.

இதனிடையே யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களின் உதவியுடன் அகழ்வுப்பணி மேலும் விஸ்தரிக்கப்பட்டுள்ளது.


No comments