செம்மணி மனித புதைகுழி:காலம் எப்போது?

 


செம்மணி மனித புதைகுழியில் ஏற்கனவே இருந்த புதைகுழி பகுதியில் புதிதாக மனித உடலங்கள் புதைக்கப்பட்டிருக்கலாமென்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இதனிடையே இன்றைய தினம் மேலும் இரு சிறுவர்கள் கைக்குழந்தையின் உள்ளடங்கலாக 10 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

செம்மணி புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 25ஆம் நாள் அகழ்வு பணிகள் இன்றையதினம்(15) திங்கட்கிழமை நடைபெற்றது.

அதன்போது புதிதாக 05 மனித என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட என்புக்கூடுகளில் சிறுவர்கள் குழந்தையின் என்புக்கூடுகள் உள்ளடங்கலாக 10 என்புக்கூடுகள் அகழ்ந்து வெளியே எடுக்கப்பட்டுள்ளன.

மீட்கப்படும் என்புக்கூடுகள் பல உடைந்த நிலையில், நேர்சீரின்மையான நிலையில் காணப்படுகின்றன.

அதனடிப்படையில் இது வரையிலான அகழ்வு பணிகளின் போது, 360 என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், அவற்றில் 351 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

கொல்லப்பட்டவர்கள் நிர்வாணமாக்கப்பட்டு வாகனங்களில் அழைத்து வரப்பட்டு செம்மணியில் அடித்துக்கொல்லப்பட்டமைந நிரூபணமாகியுள்ளது.

முன்னதாக 1996ம் ஆண்டு காலப்பகுதியில் யாழ்.குடாநாடு இலங்கை படைகளினால் கைப்பற்றப்பட்ட பின்னராக அரங்கேறிய செம்மணி படுகொலையில் கொல்லப்பட்டு புதைக்கப்பட்டவர்களது உடலங்களாக இருக்கலாமென்ற சந்தேகம் எழுந்திருந்தது.

எனினும் அக்காலப்பகுதியில் சிறுவர்கள் பெருமளவில் கொல்லப்பட்டமைக்கான சம்பவம் இடம்பெற்றிராத நிலையில் இறுதி யுத்த காலத்தில் சரணடைந்த குடும்பங்களது புதைகுழிகளாவென்ற சந்தேகம் வலுத்துள்ளது.  


No comments