கோத்தா, பஸிலுக்கு முன் பிள்ளையான்?
முன்னாள் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச மற்றும் அவரது சகோதரரான பஸில் ராஜபக்ச கைது விவகாரம் தெற்கில் பரபரப்பினை தோற்றுவித்துள்ளது.இந்நிலையில் ஈஸ்டர் தாக்குதலின் முக்கிய சாட்சியான பிள்ளையானை சிறையில் தொடர்ந்தும் தடுத்து வைக்க அரசு காய் நகர்த்தல்களை முன்னெடுத்துவருகின்றது.
கடந்த காலங்களில் மட்டக்களப்பில் ஐந்து படுகொலைகளுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் பிள்ளையான் உட்பட மூவரையும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
மட்டக்களப்பில் காவல்துறை உத்தியோகத்தர், வர்த்தகர் ஒருவர், கட்சி உறுப்பினர் படுகொலை மற்றும் கிழக்கு பல்கலைக்கழக முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரவீந்திரநாத் கடத்தல் உள்ளிட்ட ஐந்து மனிதக் கொலைகள் தொடர்பிலேயே பிள்ளையான் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டுள்ள தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான ‘பிள்ளையான்’ என அழைக்கப்படும் சி. சந்திரகாந்தன் மற்றும் இராணுவ புலனாய்வுப் பிரிவின் தகவலாளிகளான முகமட் சிபான், முகமட் சகீத் ஆகிய மூவரையும் எதிர்வரும் ஜூன் 30ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் (15) திங்கட்கிழமை சந்தேக நபர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போதே, நீதவான் தடுத்து வைப்பதற்கான உத்தரவைப் பிறப்பித்திருந்தது.
முன்னதாக பிள்ளையான் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவர் வழங்கிய தகவல்களின் அடிப்படையில் ஏனைய சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர். 2006ஆம் ஆண்டு காலப்பகுதியில் இடம்பெற்ற மேற்படி படுகொலைகள் மற்றும் கடத்தல்கள் திட்டமிட்ட அடிப்படையில் நடத்தப்பட்டதாகப் குற்றப்புலனாய்வு திணைக்களம் குற்றஞ்சுமத்தியுள்ளது.

Post a Comment