தாயத்துடன் எலும்புக்கூட்டுததொகுதி!



செம்மணி - சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் இன்று புதிதாக அடையாளப்படுத்தப்பட்ட எலும்புக்கூடு கழுத்தில் கட்டப்படும் தாயத்துடன் மீட்கப்பட்டுள்ளது.

மீட்கப்பட்ட தாயத்து தொடர்பான முழுமையான தகவல்கள் வெளிவரும் பொது பெரும்பாலும் அது யாருடைய உடலம் என்பதை கண்டுபிடிப்பதற்கான சந்தர்ப்பங்கள் உள்ளதாக அவதானிகள் கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர்.

இதனிடையே இன்றைய தினம் மீட்கப்பட்ட எலும்புக்கூட்டுடன் தேங்காய் ஒன்றின் முழுமையான சிரட்டை கோதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே மூன்றாவது கட்டமாக செம்மணி புதைகுழியில் தொடர்ந்து எலும்புக் குவியல்கள் அகழ்ந்து எடுக்கப்படுகின்றன.

குறிப்பாக இறுதியாக முன்னெடுக்கப்பட்ட அகழ்வின் போது அகழ்வு தளத்தின் ஒரு இடத்தில் எலும்புக் குவியல்கள் மீட்கப்பட்டிருந்தது.

அந்த எலும்பு குவியல்களுக்கு கீழே உக்கிய இரும்புகள் காணப்படுகின்றது. அவ்வகையில் இரும்பு பெட்டிகளுக்குள் வைத்து அந்த எலும்புக் குவியல்கள் அங்கு புதைக்கப்படிருக்காலாம் என்று நம்பப்படுகிறது.


No comments