முதல் ஆடு :தயா கமகே சொத்து பறிமுதல்!
முன்னாள் அமைச்சர் தயா கமகேவுக்குச் சொந்தமான நிறுவனங்கள் பெற்ற 42 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய நிலுவைக் கடன்களை மீளப் பெற்றுக்கொள்வதற்காக, ஈடாக வைக்கப்பட்டிருந்த சொத்துக்களைப் பகிரங்க ஏலத்தில் விற்பனை செய்ய மக்கள் வங்கியின் பணிப்பாளர் சபை தீர்மானித்திருந்தது.
வங்கிக் கட்டமைப்பின் இந்த ஏலத் தீர்மானத்தை ரத்துச் செய்யக் கோரி தயா கமகே தரப்பு நிறுவனங்களால் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் பேராணை மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. எனினும், வங்கி எடுத்த இந்தத் தீர்மானத்தில் தலையிட நீதிமன்றம் மறுப்புத் தெரிவித்து, மனுக்களை அதிரடியாக நிராகரித்துள்ளது.
இதன் மூலம், தயா கமகேவுக்குச் சொந்தமான பிணைச் சொத்துக்களை மக்கள் வங்கி கையகப்படுத்தி ஏலம் விடுவதற்கான சட்டப்பூர்வ வழிமுறை உறுதி செய்யப்பட்டுள்ளது.

Post a Comment